கர்ப்ப காலத்தில் இரத்தப்போக்கு காரணங்கள்? - Bleeding in pregnancy

கர்ப்ப காலத்தில் இரத்தப்போக்கு (Bleeding in pregnancy)

கர்ப்ப காலத்தில் இரத்தப்போக்கு (Bleeding in pregnancy) என்பது சில சமயங்களில் சாதாரணமாக இருக்கலாம், ஆனால் சில நேரங்களில் அது முக்கியமான பிரச்சினையின் அறிகுறியாகவும் இருக்கலாம். அதனால் இதைப் பற்றிச் சரியாக தெரிந்து கொள்ளுவது அவசியம்.

கர்ப்பத்தின் ஆரம்ப காலம் அதாவது முதல் 3 மாதங்கள், இந்த காலத்தில் சிறிய அளவு ரத்தப்போக்கு ஏற்படலாம்.

  • Implantation bleeding – கருவானது கருப்பையில் பதியும் போது லேசான இரத்தப்போக்கு ஏற்படும்.
  • Hormonal changes – ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக
  • Infection – கருப்பை அல்லது யோனியில் தொற்று காரணமாக இருக்கலாம்.

கர்ப்ப காலத்தில் இரத்தப்போக்க்கில் கவனிக்க வேண்டிய காரணங்கள்:

  1. கருக்கலைப்பு (Miscarriage)
  2. Ectopic pregnancy (கருப்பை வெளியே கரு வளர்ச்சி) – மிக ஆபத்தான நிலை
  3. கர்ப்பத்தின் நடுப்பகுதி 5வது மாதம் மற்றும் கடைசி காலம்
  4. Placenta previa – பிளாசென்டா கீழே இருப்பது
  5. Placental abruption – பிளாசென்டா பிரிவது
  6. Preterm labor – முன்கூட்டியே பிரசவம் ஆரம்பமாகுதல்

கர்ப்பகாலத்தில் இரத்தப்போக்கு ஏற்பட்டால் எப்போது மருத்துவரை பார்க்க வேண்டும்?

  • அதிகமான இரத்தப்போக்கு
  • வயிற்று வலி அல்லது கீழ் வயிற்று பிடிப்பு
  • தலைசுற்றல் அல்லது மயக்கம்
  • இரத்தம் கறுப்பாக அல்லது கட்டியாக வருதல்

கர்ப்பகாலத்தில் இரத்தப்போக்கு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

  • உடனே மருத்துவரை அணுகவும்
  • ஓய்வு எடுக்கவும்
  • தன்னிச்சையாக மருந்து எடுக்க வேண்டாம்

👉 முடிவாக, கர்ப்ப காலத்தில் எந்த அளவிலான இரத்தப்போக்கும் கவனமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இது ஒரு சாதாரண விஷயமா அல்லது ஆபத்தானதா என்பதை மருத்துவர் மட்டுமே உறுதி செய்ய முடியும்.

Comments

Popular Posts

Miscarriage Reasons and Prevention - கருச்சிதைவு காரணங்கள் மற்றும் தடுப்பு முறைகள்

10 Healthy Habits to Follow Every Day for a Better Life

கர்ப்பிணிகள் காளான் சாப்பிடுவது பாதுகாப்பானதா?

Pregnancy Symptoms Week by Week